ராமநாதபுரம் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடி நடைபெற்றது
புத்தேந்தல் கிராமத்தில் 38 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மதர் சார்பாக கொண்டாடப்பட்டது
ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமத்தில் 38ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இன்று காலை வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. பின் உறியடி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. உறியடித்த ஜெயகாந்த் என்பவரை கண்ணன் கோவிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்து உறியடித்தனர். ஆனந்த் பாபு உறியடி கயிறு இழுத்தார். அப்போது இளைஞர்கள் உறியடிப்பவர் மீது மஞ்சள் நீர் ஊற்றினர். மேலும் பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் சாயப்பொடிகளை பூசிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் ஏற்பாடு செய்திருந்தார்