ராசிபுரம் அருகே நள்ளிரவில் கேஸ் பெட்ரோல் பங்கில் தூங்கிக் கொண்டிருந்த பணியாளரின் செல் போன்கள் திருட்டு சிசிடிவி., காட்சிகள் வைரல்..
ராசிபுரம் அருகே நள்ளிரவில் கேஸ் பெட்ரோல் பங்கில் தூங்கிக் கொண்டிருந்த பணியாளரின் செல் போன்கள் திருட்டு சிசிடிவி., காட்சிகள் வைரல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து ஆண்டகளூர்கேட் செல்லும் சாலையில், தனியார் கேஸ் பங்க் (KR Fules) உள்ளது. இங்கு, 5க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பணியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கேஸ் பங்க் அலுவலகம் முன்பு சார்ஜில் இருந்த செல்போனை திருடிச் சென்றான். இந்தக் காட்சி சிசிடிவி.,யில் பதிவாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நள்ளிரவு வேளையில் செல்போன் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.