ஆரணி அசைவ ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் அட்டைப்பூச்சி. பிரியாணி சாப்பிட்ட பெண்ணுக்கு வாந்தி மயக்கம். வேடிக்கை பார்க்கும் உணவு பாதுகாப்பு துறை
ஆரணி. ஆக.27 ஆரணி மணிகூண்டு அருகில் உள்ள 5 ஸ்டார் தனியார் அசைவ ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் அட்டைப்பூச்சி இருந்ததால் இதனை சாப்பிட்ட பெண்ணிற்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆரணி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆரணி மணிக்கூண்டு அருகில் உள்ள தனியார் அசைவ ஓட்டலுக்கு சென்று சிக்கன் பிரியாணி இரண்டு பார்சல் வாங்கி சென்றுள்ளார் பின்னர் வீட்டிற்கு சென்று பிரியாணி பார்சலை பிரித்து அவரது மனைவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அப்போது பிரியாணியில் பூச்சி ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது அட்டைப்பூச்சி என தெரியவந்தது. உடனே அந்த பெண்ணிற்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அவரது மனைவியை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் கொடுத்தார். புகார் கொடுத்து மூன்று நாட்களாகியும் உணவு பாதுகாப்புத் துறை இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து மணிகூண்டு அருகில் உள்ள தனியார் ஓட்டலில் இவ்வாறு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தன்னார்வலர்களின் கேள்வியாக உள்ளது