மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலாண்மை மறுகட்டமைப்பு கூட்டம்
ஆரணி, ஆக 27 ஆரணி அடுத்த மேல்மட்டை விண்ணமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மை மறுக்கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றதில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்
அடுத்த மேல்மட்டை விண்ணமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மை மறுக்கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை கூட்டு அமைப்புக்கு 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலாண்மை குழு தலைவராக லலிதா சரவணன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக முருகேசன் தேர்வு செய்யப்பட்டார். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மேலாண்மை குழு கட்டமைப்பு தலைவர் லலிதா சரவணன் மற்றும் புதிய நிர்வாகிகள், பள்ளியின் வளர்ச்சி, சுகாதாரம், தூய்மை, மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல், தமிழக அரசு வழங்கும் அனைத்து உபகரணங்களையும் முறையாக வழங்குவதற்கு உறுதுணையாக இருந்து பெருமை சேர்க்கும் வகையில் இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்