பரஞ்சேர்வழியில் கள் இறக்கி விற்றவர் கைது

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரஞ்சேர்வழி ஊராட்சியை சேர்ந்தவர் செல்வராஜ் கள் இறக்கி விற்பனை செய்ததாக காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2024-08-28 00:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரஞ்சேர்வழி ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் தனது குடும்பத்துடன் வசித்து படி விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் பரஞ்சேர்வழி பகுதியில் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்யப்பட்டதாக காங்கேயம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் அங்கு வந்து விசாரித்த போது செல்வராஜ் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதை எடுத்து அவரிடம் இருந்து 2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Similar News