சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாநில தலைவர் பங்கேற்பு
சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சக்கரித்தாய், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கிராமப்பகுதிகளில் அதிக அளவு இளைஞர்களை கட்சியில் சேர்ப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநகர துணைத்தலைவர் திருமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.