கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு!

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!

Update: 2024-08-28 05:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் ரோச் பூங்காவில் கத்தியைக் காட்டி மிரட்டி வாலிபர்களிடம் 3 செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு மகன் தினேஷ்குமார் (24), இவரது நண்பர்கள் அந்தோணி (25), ஸ்டார்வின் (31) இவர்கள் 3 பேரும் கடந்த 25ஆம் தேதி இரவு தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ரோச் பூங்காவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர் இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்கில் அவர்களிடம் இருந்த 3 செல்போன்களை பறித்துச் சென்றுவிட்டார்களாம். அவர்கள் பறித்து சென்ற செல்போன்களின் மதிப்பு ரூபாய் 40 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து தினேஷ் குமார் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News