தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி வருகின்ற 31 மற்றும் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கபடி போட்டி நடத்துவது சம்பந்தமாக திம்மரசநாயக்கனூர் கிராம பொதுமக்கள் சார்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கபடி போட்டியினை மிக சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றும் ,அதன் வழிமுறைகளை பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் கணவாய் தென்றல் கபடி குழுவினர் முன்னாள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்