ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
ஆரணி, ஆக 29: ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றதில் சுமார் ரூ.25லட்சம் மதிப்பிலான பணிக்கு தீர்மானம் நிறைவேற்றினர். .
ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றதில் ஒன்றிய குழுத் தலைவர் கனிமொழி சுந்தர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கே.டி.இராஜேந்திரன். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராமன், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கவிதா பாபு எஸ்.வி.நகரத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் கேட்டதை நிறைவேற்றி தந்தமைக்கு ஒன்றிய குழு தலைவருக்கு நன்றியும், மேலும் விடுபட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை முடித்து தரும்படி கோரிக்கை வைத்தார். மேலும் இக்கூட்டத்தில் டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு ரூ.2லட்சத்து 82ஆயிரம் ஊதியமும்,அலுவலத்திற்கு அனைத்து துறைக்கும் இணையதள வசதிக்காக ரூ.1லட்சத்து 59ஆயிரமும், சுதந்திர தினத்திற்கு அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியேற்றுவதற்காக ரூ.2லட்சத்து 14ஆயிரம் என சுமார் ரூ.25லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜெயபிரகாஷ், கலா ரகு, பரிமளா கருணாகரன், டி.ராமன், அனிதா செல்வராஜ், விஜயலட்சுமி குமரவேல், குமார், விமலா காசி, தண்டாயுதபாணி, புனித அலெக்ஸ், கௌரி பூங்காவனம், எழிலரசி, ரஞ்சித், யசோதா, செல்வராஜ் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.