ஆரணியில் அண்ணா தொழிற்சங்க கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்.
ஆரணி, ஆக28. ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து புதன்கிழமை அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக அரசு போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் துண்டு பிரசுரங்களை அதிமுக சார்பில் விநியோகம் செய்யப்பட்டது. இதில் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் டி.மனோகரன் தலைமை தாங்கினார். இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும் இதில் ஆரணி, போளுர், சேத்துப்பட்டு ஆகிய அரசு பணிமனை உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழச்சியில் மாவட்ட பேரவை செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜிவி.கஜேந்திரன், திருமால், வீரபத்திரன், நகர செயலாளர் அசோக்குமார், ஆரணி பணிமனை நிர்வாகிகள் வேல்முருகன், தரணி, ஆனந்தன், போளுர் பணிமனை நிர்வாகிகள் ஆறுமுகம், மனோகரன், சேத்துப்பட்டு பணிமனை நிர்வாகிகள் ராமன், சிவஞானம், குலசேகரன், மாவட்ட பொருளாளர் எம்.வேலு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஏ.ஜி.ஆனந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.