தேனி அருகே திம்மரசநாயக்கனூரில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது
பொழுது போக்கு , ஆன்மீகம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழா நடைபெற்றது .இந்த திருவிழாவின் கடைசி நாளில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் போட்டியில் பங்கேற்றனர் மேலும் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை திம்மரசநாயக்கனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்