ஆரணியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா
ஆரணி ஆக.29 ஆரணியில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர் அட்டைகளை சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதாலட்சுமிகாந்தன் ஆகியோர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினர்;
ஆரணியில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இதில் ஆரணி, போளுர், சேத்துப்பட்டு ஆகிய அரசு பணிமனை உறுப்பினர்கள் பங்கேற்று உறுப்பினர் அட்டைகளை வாங்கினர். நிகழச்சிக்கு மண்டல செயலாளர் டி.மனோகரன் தலைமை தாங்கினார் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதாலட்சுமிகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தொழிற்சங்க உறுப்பினர் அட்டைகள் வழங்கினர். நிகழச்சியில் மாவட்ட பேரவை செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜிவி.கஜேந்திரன், திருமால், வீரபத்திரன், நகர செயலாளர் அசோக்குமார், ஆரணி பணிமனை நிர்வாகிகள் வேல்முருகன், தரணி, ஆனந்தன், போளுர் பணிமனை நிர்வாகிகள் ஆறுமுகம், மனோகரன், சேத்துப்பட்டு பணிமனை நிர்வாகிகள் ராமன், சிவஞானம், குலசேகரன், மாவட்ட பொருளாளர் எம்.வேலு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஏ.ஜி.ஆனந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.