காங்கேயத்தில் அதிமுக செயல் வீரர் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது

காங்கேயத்தில் அதிமுக  கழக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் தொடக்க விழா பொள்ளாச்சி.V.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாஜக அண்ணாமலைக்கு பதிலடி 

Update: 2024-08-29 04:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக  கழக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் தொடக்க விழா முன்னாள் துணை சபாநாயகருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி.V.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றியசெயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், நகர செயலாளர் வெங்கு ஜி மணிமாறன் குண்டடம்  வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தசண்முகசுந்தரம்   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாஜக அண்ணாமலைக்கு பதிலடியாகபதில் தெரிவித்தார்.. திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி காங்கேயம் ஒன்றியம், காங்கேயம் நகரம், குண்டடம் வடக்கு ஒன்றிய கழகங்களின் சார்பாக முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொள்ளாச்சி.V.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் தொடக்க விழாவில் பொள்ளாச்சி.V.ஜெயராமன் அவர்கள்  கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி, 2024- நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பூத் வாரியாக ஆய்வு செய்து சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில், மாவட்ட கழக துணைச் செயலாளர் திருமதி லட்சுமி சோமசுந்தரம் , மாவட்ட கழக பொருளாளர் .K.G. கிஷோர் குமார், வெள்ளகோவில் ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர ஊராட்சி, கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் உறுப்பின்கள் சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தது :  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று காங்கேயத்தில் நடைபெற்று வருகின்றது. கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டு செல்கின்ற கழக தொண்டர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். எதிர்காலத்தில் கழகத்தினுடைய வெற்றி வாய்ப்பை நிச்சயமாக அதிகப்படுத்தி காட்டும். இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியுடைய அலங்கோலங்கள் சொல்லி மாறாது. தமிழகத்தில் நடந்து தொழில்களும் சீர்குலைந்து வருகின்ற நேரத்திலே இங்கே இருக்கின்ற தொழிலை சீர் செய்ய வேண்டிய முதலமைச்சர் இங்கே இருக்கின்ற தொழிலதிபர்கள் சிறு குறு தொழிலதிபர்களை அழைத்து சந்தித்து பேசி என்ன குறை அவற்றை தீர்த்து வைத்து இங்கே இருக்கின்ற தொழில்களை கரூர், காங்கேயம், பொள்ளாச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் நடக்கின்ற டெக்ஸ்டைல் தொழிலானாலும், கொப்பரை தேங்காய் தொழில் ஆனாலும், தென்னை நார் தொழில் ஆனாலும், ஜமுக்காலும் உற்பத்தி செய்கின்ற தொழில் ஆனாலும், கோவையில் நடக்கிற ஃபவுண்டரிகள் உற்பத்தி மற்றும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற உற்பத்தி தொழில்களும் அனைத்துமே இந்த தமிழகத்தில் முடங்கி கிடக்கின்றது. இதை சரி செய்யாமல் மின்சார கட்டணம் உயர்வால் சிறு தொழில் அதிபர்கள் வேதனையா இருக்கின்ற சூழ்நிலையிலே இதை சரி செய்ய வேண்டிய முதலமைச்சர் இன்று அமெரிக்கா சென்று இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாமல் வானமேறி வைகுண்டம் போகப் பார்க்கின்றார் நமது முதலமைச்சர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து அவதூறு பேசி வருவது குறித்த கேள்விக்கு: வேகமாக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருக்கிறார் அரைவேக்காடு அண்ணாமலையாக இருக்கிறார். எடப்பாடியாரை பற்றி அநாகரிகமான முறையிலே அவருடைய விமர்சனம் மிகவும் கண்டிக்கத்தக்கது அவருடைய ஒரே இலட்சியம் முதலமைச்சர் பதவி தான். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். அதற்கு யார் எதிராக இருந்தாலும் அவர்களை பற்றி தூற்றுவார்.

Similar News