ராமநாதபுரம் மீனவர் உடல் மீட்பு
ராமேஸ்வரம் நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் ஒருவர் உடல் சடலமாக மீட்பு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று செவ்வாய்க்கிழமை மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் மாயமான மீனவர்கள் எமரிட் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரை ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உதவியுடன் நடுக்கடலில் தேடி வந்த நிலையில் தற்போது மாயமான மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றிய மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு உடலை எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.