திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் இன்று நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகிழ்வநாதபுரம் மற்றும் மானூர் ஒன்றிய பகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின் பொழுது நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைதீன் கான், நெல்லை மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன்,மதிமுக பிரமுகர் சுதர்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.