பெண் கொலை இளைஞருக்கு சிறை தண்டனை
நீதிபதி ஜி.அனுராதா, சொக்கருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
ஆண்டிபட்டியை அடுத்த வருஷநாடு அருகேயுள்ள காந்திபுரத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தேனி மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.காந்திபுரத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி சமுத்திரம் (48). தனது கணவா் இறந்து விட்ட நிலையில், இவா் அதே ஊரில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தாா். இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த ரத்தினம் மகன் சொக்கா் (35), இவரிடம் தவறாக நடத்த முயன்றாா். இதைக் கண்டித்த அவரைக் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து வருஷநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சொக்கரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.அனுராதா, சொக்கருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.