ராமநாதபுரம் மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்
ராமேஸ்வரம் நடுக்கடலில் மாயமான மீனவர் மீட்டுதரகோரி மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 27ஆம் தேதி கரை திரும்பும் போது நடுக்கடலில் படகு மூழ்கியதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டார். எஞ்சிய மற்றொரு மீனவரான வெள்ளைச்சாமியை உடனடியாக மீட்டு தரக்கோரியும் சடலமாக மீட்கப்பட்ட மீனவர் எமரிட்டுக்கு உடனடியாக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீன்வளத்துறை அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.