லட்சுமி நகரில் மது போதைக்கு அடிமையாகி விட்டோமே! என விரக்தி அடைந்தவர் தூக்கிட்டு தற்கொலை.
லட்சுமி நகரில் மது போதைக்கு அடிமையாகி விட்டோமே! என விரக்தி அடைந்தவர் தூக்கிட்டு தற்கொலை.
லட்சுமி நகரில் மது போதைக்கு அடிமையாகி விட்டோமே! என விரக்தி அடைந்தவர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, அதியமான் கோட்டை அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 48.இவர் ஒரு கைத்தறி தொழிலாளி. அண்மை காலமாக மோகன்ராஜ் மது போதைக்கு அடிமையாகி இருந்தார். நன்றாக இருந்த நான் இப்படி மது போதைக்கு அடிமையாகி விட்டேனே! என மனம் வெதும்பி,விரக்தி மனநிலையில் வாழ்ந்து வந்தவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி மதியம் 3-மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று இருந்த மனைவி தனலட்சுமி வீடு திரும்பிய போது, தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும்,இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த மோகன்ராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.