குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்க பொதுக் குழு கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களின் சங்க பொதுக்குழு கூட்டம்

Update: 2024-08-29 13:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களின் முன்னேற்ற சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கோட்டத்திற்கு வட்ட தலைவர் கணேசன் தலைமை வைத்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களின் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அழகர்சாமி கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு உள்ள சலுகைகள் மற்றும் பணி சுமையை எப்படி கையாளுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட தலைவர் நாகமணிகண்டன் மாவட்ட செயலாளர் ரவி. இணைச்செயலாளர் குணா சேகரன் மற்றும் வட்டச் செயலாளர் அண்ணாதுரை பொருளாளர் கீதா மற்றும் வட்ட பொறுப்பாளர் கரும்பாச்சலம் அழகர் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் பணி தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது குறிப்பாக டிஜிட்டல் கிராப் சர்வீஸ் பணியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தொடர்பாகவும் மேலும் அரசிடம் கையடக்க கணினி மற்றும் கிராப் சர்வீஸ் பதிவிற்கு தொகுப்பு ஊதியம் வழங்குவது தொடர்பாகவும் மேலும் குளித்தலை காவிரி ஆற்றில் மணல் திருடுவதை தடுக்கும் பொருட்டு கிராம நிர்வாக அலுவலர்களே ஒரு நாளைக்கு மூன்று விரிவாக பிரித்து பணியில் அமர்த்த படுவதன் மூலம் நான்கு தோறும் கிராமத்திற்கு வரும்போது மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் இப்பணியின் இரவில் மட்டும் உரிய பொதுப்பணித்துறையுடன் காவல்துறை மற்றும் வருவாய் துறை சேர்ந்து கூட்டுறவுந்து பணியில் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப்பதிவேட்டில் விடுதல் ஏதும் இருப்பின் பதிவேட்டின் சரி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News