காங்கேயம் பகுதிகளில் தண்ணி காட்டும் நாய்கள் - தடுமாறும் மாவட்ட நிர்வாகம் - கவலையில் விவசாயிகள் - வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

காங்கேயம் அருகே பகவதிபாளையம் தோட்டத்திற்குள் புகுந்த வெறி நாய்கள் வெள்ளாடுகளை கடித்து குதறியதில் 2 ஆடுகள் பலி 6 ஆடுகள் படுகாயம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியான ஆடுகளுடன் காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு.

Update: 2024-08-29 13:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் அருகே வீரணம் பாளையம் ஊராட்சி, பகவதி பாளையத்தில் விவசாயி வேலுச்சாமி (வயது 50) என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த வெறிநாய்கள் 8 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 2 வெள்ளாடுகள் பலியானது, மீதமுள்ள 6  ஆடுகள் படுகாயம்.இதனால் வேதனை அடைந்த விவசாயி 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆடுகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில் காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில் இதுவரை 1000 ஆடுகளுக்கு மேல் வெறிநாய்கள் கடித்து பலியாகி உள்ளது , மேலும் விவசாயிகள் ஆடு,மாடு,கோழி போன்ற கால்நடை வளர்ப்பது தான் இன்றைய வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. அதற்கும் தற்போது இந்த வெறி நாய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த வாரத்தில் புதுப்பை கிராமத்தில் ஆடுகளை கடித்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 2  நாய்களை   பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்றதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 24 பேர் மீது மூலனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், தோட்டப்பகுதிகளில்கு புகுந்து அங்கு வளர்க்கக்கூடிய கால்நடைகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் கடும் குற்றச்சாட்டை தெரிவித்தனர். 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறந்த ஆடுகல் மற்றும் காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட ஆடுகளை  எடுத்து வந்து வட்டாச்சியர் அலுவலகம் வளாகத்தில் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமி, வருவாய் ஆய்வாளர் விதுர் வேந்தன், காங்கேயம் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News