ஆரணி போளூர் நெடுஞ்சாலை பகுதியில் முள் புதரில் ஆண் சடலம் கண்டெடுப்பு. அடித்து கொலை செய்து வீசப்பட்டரா போலீஸார் தீவிர விசாரணை.
ஆரணி, ஆக 29. ஆரணி-போளூர் சாலையில் கஸ்தம்பாடி பகுதியில் சாலை ஓரம் உள்ள முள்புதரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்ததை களம்பூர் போலீஸார் கண்டெடுத்து கொலை செய்து வீசப்பட்டாரா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த காசிமுத்து மகன் ஆனந்தன்(37) என்று தெரியவந்தது. மேலும் ஆனந்தன் தினமும் களம்பூர் பகுதியில் உள்ள குமாரசாமி என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் பணிபுரிந்து விட்டு இரவு நேரத்தில் தினமும் வீட்டிற்கு பேருந்து மூலம் சென்று விடுவாராம். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து விட்டு வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஆனந்தன் கடந்த 2 நாட்களாக ஓட்டலுக்கு வேலைக்கு வரவில்லை. இதனால் ஆனந்தன் வராதது குறித்து அவரது வீட்டிற்கு ஓட்டல் தரப்பினர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கடந்த இரண்டு தினங்களாக வீட்டுக்கு வரவில்லை என தகவல் தெரியவந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை களம்பூர் அருகே உள்ள கஸ்தம்பாடி பகுதியில் உள்ள சாலை ஓரம் முள் புதரில் ஆண் சடலம் உள்ளது என களம்பூர் போலீஸாருக்கு அப்பகுதியினர் பார்த்து தகவல் தெரிவித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு களம்பூர் போலீஸார் சென்று சடலத்தை மீட்டனர். மேலும் இறந்து 2 நாட்களாகி அழுகிய நிலையில் சடலம் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை செய்ததில் களம்பூர் ஓட்டலில் பணிபுரிந்த ஆனந்தன் என்பவர் தெரிய வந்தது. ஆனந்தனின் உடல்களில் ஆங்காங்கே பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சடலமாக இருந்ததால் ஆனந்தனை யாராகிலும் அடித்து கொலை செய்துவிட்டு நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்த பகுதியில் சாலை ஓரத்தில் வீசி சென்று விட்டார்களா? அல்லது கஸ்தம்பாடி கோவில் திருவிழாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருவிழாவை காண ஆனந்தன் செல்லும்போது சாலை விபத்தில் அடிபட்டு இறந்து கிடந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ஹோட்டல் உரிமையாளரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆனந்தனின் சடலத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.