ராமநாதபுரம் புதிய உறுப்பினர் கார்டு வழங்கும் விழா நடைபெற்றது
ராமநாதபுரம் தனியார் திருமண மஹாலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதிய உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் புதியதாக உறுப்பினர்களாக சேர்ந்த அனைவருக்கும் புதிய உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் புதிய உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்வு நகர் செயலாளர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் 33 வார்டுகளுக்கும் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னால் அமைச்சர் அன்வர்ராஜா கலந்து கொண்டு புதிய உறுப்பினர் கார்டு வழங்கினார்கள்.