காங்கேயம் வட்டாட்சியர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது காங்கேயம் காவல் துறை கண்காணிப்பாளர் மாயவன் முன்னிலை வகித்தார்.

Update: 2024-08-30 01:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கேயம் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அடுத்த மாதம் ஏழாம் தேதி தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த விழாவை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலைகளை கொண்டு செல்லும் சாலைகளின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு சிலைகள் எந்தெந்த வழியாக எந்த நேரத்திற்கு கடந்து செல்ல வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக் கூட்டம் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் முன்னிலை வகித்தார் காங்கேயம் மின்வாரிய உதவி செய்ய பொறியாளர் விமலா காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாஷ் காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன் காவல் உதவி ஆய்வாளர்கள் கார்த்திக் குமார், சந்திரன், ஏசுதுரை மற்றும் இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி, ஒன்றிய தலைவர் நாகராஜ், நகரச் செயலாளர் கௌரி சங்கர், வெள்ளகோவில் நகரச் செயலாளர் ராஜேஷ் உட்பட இந்து அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News