கடமலைகுண்டில் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் பங்கேற்று திமுக வளர்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள கடமலைகுண்டில் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கடமலை மயிலாடும்பாறை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கூட்டமானது தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமாகிய கம்பம்.நா.இராமகிருஷ்ணன் தலைமையில் ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளரும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினருமாகிய மகாராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது , கடமலை மயிலாடும்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி ,கடமலை மயிலாடும்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . இந்த நிகழ்வில் இளைஞரணி அமைப்பாளர் செஞ்சுரி செல்வம்,மகளிர் அணி அமைப்பாளர் ஜெப்ரின் ஜியோன் ,சாரதா சென்ராயன் மற்றும் பலர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மகளிர் அணியின் உறுப்பினர் சேர்க்கை பற்றியும் மகளிர் அணியை எவ்வாறு செயல்படுத்துவது குறித்தும், வருகின்ற தேர்தலில் எவ்வாறு முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நிகழ்த்தப்பட்டது