வட்டார அளவில் சதுரங்க போட்டி

போட்டி

Update: 2024-08-30 05:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் உமாராணி, ஏழுமலை, உடற்கல்வி இயக்குநர் பாலாஜி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர்கள் அன்பு, வளர்மதி, பிரான்சிஸ்மேரி, புஷ்பராணி, சுமதி, வைத்தீஸ்வரன், கலாநிதி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினார்கள். ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 11, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

Similar News