சத்தியமங்கலம் வணிக கடை எடை தராசுகளுக்கு போலி முத்திரைச் சான்றிதழ் வழங்கியவர் கைது.
சத்தியமங்கலம் வணிக கடை எடை தராசுகளுக்கு போலி முத்திரைச் சான்றிதழ் வழங்கியவர் கைது.
சத்தியமங்கலம் வணிக கடை எடை தராசுகளுக்கு போலி முத்திரைச் சான்றிதழ் வழங்கியவர் கைது. சத்தியில் உள்ள வணிக கடைகளில் எடை போட பயன்படும் எடை தராசுகளுக்கு போலி சான்றிதழ் வழங்கிய நபர் கைது. கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர், தீபக் விஜய் ( 24) விஜய் வேயிங் ஸ்கேல்ஸ் என்ற பெயரில் தராசு கடை நடத்தி வருகிறார். இவர் சத்தி பகுதியில் உள்ள வணிக கடைகளில் பொருட்கள் எடை போட பயன்படும் தராசுகளுக்கு முத்திரை சான்றிதழ் வழங்கியது போலி என தெரியவந்தது. இது குறித்து கடை உரிமையாளர் ஒருவர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் லோகநாதனிடம் புகார் அளித்தார். இதையடுத்து தொழிலாளர் உதவி ஆய்வாளர் லோகநாதன் ஆய்வு செய்ததில் இது போல் ஏராளமான கடைகளுக்கு போலி சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. இது குறித்து லோகநாதன் சத்தி போலீஸ் ஸ்டேசனில் புகரளித்தார். புகாரின் அடிப்படையில் தீபக் விஜயை சத்தி போலீஸார் கைது செய்து ஸ்டேஷனுக்கு கூட்டி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.