தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திலும் வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படும்- கரூர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் கந்தராஜா கரூரில் பேட்டி
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திலும் வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படும்- கரூர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் கந்தராஜா கரூரில் பேட்டி
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திலும் வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படும்- கரூர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் கந்தராஜா கரூரில் பேட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும் வேளாண் கருவிகள் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது குறித்து, கரூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் கந்தராஜா செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, தமிழக அரசின் சார்பில் வேளாண் துறையில் உழவன் செயலியில் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் கருவிகள் வழங்குவது தொடர்பாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு தேவையான கருவிகள் கிடைக்காத பட்சத்தில், அந்த செயலியின் கீழ்பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறை சார்பிலும், தேவையான கருவிகளும், இயந்திரங்களும் வாடகைக்கு விடுவது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும். எனவே அதை பயன்படுத்த வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் விவசாயப் பணிகளில் திரவ நிலையில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட உள்ளதால், இதனை தெளிப்பதற்கு ட்ரோன்களும் தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.