ராமநாதபுரம் பேச்சுப்போட்டி நடைபெற்றது
ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி தனியார் மஹாலில் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பாக கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி தனியார் மகாலில் நடைபெற்றது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பாரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா, துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா மற்றும், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிக ** ளில் இருந்து கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா மூன்று நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பேசியவர்களுக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.