எங்கள் நிலம் என்பது உயிருக்கு மேலானது. அதனை மீட்க உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி பேட்

எங்கள் நிலம் என்பது உயிருக்கு மேலானது. அதனை மீட்க உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி பேட்டி.

Update: 2024-08-30 11:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
எங்கள் நிலம் என்பது உயிருக்கு மேலானது. அதனை மீட்க உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி பேட்டி. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அண்மைக்காலமாக விவசாயிகளின் நிலத்தை எந்தவித சட்ட அதிகாரமும் இல்லாமல் கோவில் நிலம் என்ற பெயரில் ஜீரோ மதிப்புடையதாக, கரூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் பெயரில் உள்ள பட்டாவையும் நீக்கி உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் சங்கத்தினர் நடத்தியுள்ளனர். மேலும், இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகளின் நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்வது குறித்து பல்வேறு ஆவணங்களை மேற்கோள் காட்டி அதிகாரிகள் சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல், அவர்கள் இஷ்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதை சுட்டிக்காட்டி, அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈசன் முருகசாமி 1863-ம் ஆண்டிலிருந்து 1963 ஆம் ஆண்டு வரை 13 முறை இனாம் நில ஒழிப்பு சட்டம் திருத்த செய்யப்பட்டுள்ளது எனவும், அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது எனவும், அதன் பிறகு பலமுறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலம் தொடர்பாக பரிமாற்றம் நடைபெற்றுள்ளது எனவும், இதற்கும் கோயில் நிலங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார். ஒருவேளை கோவில் நிலம் என அரசு தரப்பில் உரிமை கோரினால் முறைப்படி சிவில் நீதிமன்றத்தில்தான் இதற்கு தீர்வு காண முடியும். ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் விவசாயிகளின் நிலத்தை பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதாகவும், விரைவில் அதற்கு தீர்வு காணப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், எங்கள் நிலம் என்பது உயிருக்கு மேலானது. அதனை மீட்க உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

Similar News