ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு
டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மூன்றாவது வார்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை என்று புகார்
ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற கவுன்சில் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது .கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜோதி மற்றும் துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக மூன்றாவது வார்டு கவுன்சிலர் பாலமுருகன் பேசும்போது, டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மூன்றாவது வார்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை என்றும் மேலும் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பினார். செயல் அலுவலர் மற்றும் தலைமை எழுத்தர் இல்லாத காரணத்தால் உறுப்பினர்களின் கேள்விக்கு முறையான பதில் அளிக்க முடியவில்லை .பல்வேறு அலுவல் காரணமாக நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலர்கள் கூட்டத்திற்கு வராததால் கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்தனர்.