மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்கி சிறப்பித்த அமைச்சர் ஐ பெரியசாமி
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்கி சிறப்பித்தார்
தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது .ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்கி சிறப்பித்தார். கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்) ,மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னிலையில் மாணவர்களுக்கு வங்கி கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் ஊராட்சி பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்