ராமநாதபுரம் திமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு மரியாதை செலுத்த வருகை உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரத்தில் தனியார் மகாலில் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பரமக்குடி சட்டப்பேவை உறுப்பினர் செ.முருகேசன் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு மரியாதை செலுத்த வருகை தரும் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான தொண்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டமைக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன்,முன்னாள் எம்.பி.,பவானிராஜேந்திரன்,மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பா ஏ.என்.ரகு மற்றும் மாநில,மாவட்ட,நகர்,ஒன்றிய,பேரூர்கழகம் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.