அறந்தாங்கி அடுத்த புதுவாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தாஜுதீன் இவர் வீட்டிலிருந்து அறந்தாங்கி வந்துள்ளார். அவர் கட்டுமாவடி முகம் என்னும் இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அவருக்கு பின்னால் வந்த லாரி மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.