எல்லைக்காட்டுவலசு டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. இருவர் படுகாயம்.
எல்லைக்காட்டுவலசு டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. இருவர் படுகாயம்.
எல்லைக்காட்டுவலசு டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வரவணை அருகே சுண்டுகுழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் வயது 23. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 28 ஆகிய இருவரும் அவர்களுக்கு சொந்தமான டூவீலரில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு டூ வீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் அருகில் உள்ள எல்லைக்காட்டு வலசு பிரிவு அருகே சென்ற போது டூவீலரை கார்த்தி வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், கவன குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.