உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை!
தூத்துக்குடி டேக் தொழிற்சாலையில் உயிரிழந்த இளைஞர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையின் துணை நிறுவனமான டேக் தொழிற்சாலையில் நேற்று பணியில் இருந்தபோது அமோனியா வாயுத் தாக்கி ஹரிஹரன் என்ற வாலிபர் பலியானார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் இதுவரை சரியான பதில் அளிக்காததை கண்டித்து இரண்டாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து கோட்டாட்சியர் பிரபு தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த ஹரிகரன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.