கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் காவல்துறை விசாரணை
காங்கேயம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் காவல்துறை விசாரணை
காங்கேயம் பகுதியில் அனுமதி இன்றி கிராவல் மணல், மணல், ஓடக்கற்கள் கடத்துவது மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு அள்ளுவது மேலும் மணல் ஏற்றி வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வப்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையை காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நால்ரோட்டில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் தனியார் கிரசருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வருவதாக தகவல் கிடைத்து கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் அங்கு சென்று லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார். இந்த சோதனையில் பிடிபட்ட லாரியில் எவ்வித உரிமமும், நடைச்சீட்டும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் இந்த லாரி திருப்பூர் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த தனியார் கிரசருக்கு சொந்தமானது என்பதும் உரிமை இன்றி சுமார் 1.5 டன் அளவுள்ள கிராவல் மண் எடுத்துச் சென்றதாகவும், காங்கேயம் காவல் துறையில் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.