சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி இலவச கண் பரிசோதனை முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி இலவச கண் பரிசோதனை முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி இலவச கண் பரிசோதனை முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சிந்தாமணிபட்டி பகுதியில் செயல்படும் சஊதிய்யா ஓரியண்டல் அரபிக் மேல் நிலை பள்ளியில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், அரசன் கண் மருத்துவமனை, அமராவதி மருத்துவமனை, மாவட்ட காசநோய் மையம் இணைந்து நடத்திய சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து சமுதாய மக்கள் பயன் பெறும் வகையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம், நுரையீரல் மற்றும் பொது மருத்துவ முகாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கரூர் மாவட்ட தலைவர் முகமது சலீம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க முகாம் ஒருங்கிணைப்பாளர் முகமது சலீம், சிந்தாமணிப்பட்டி கிழக்கு பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், தேவர் மலை ஊராட்சி மன்ற தலைவர் நக்கீரன், சிந்தாமணி பட்டி ஜாமியா பள்ளிவாசல் தலைவர் சம்சுதீன், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த முகாமை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார். முகமை துவக்கி வைக்க வந்த எம்எல்ஏ சிவகாமசுந்தரிக்கு பொன்னாடை மற்றும் சால்வைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்த முகாமில் கண் சம்பந்தமான இலவச ஆலோசனையும், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்க்கு தேவையான ஆலோசனை, உணவு, தங்கும் இடம், போக்குவரத்து செலவு அனைத்தையும் முகாம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், ரத்த அழுத்த பரிசோதனை, எடை பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, சளி பரிசோதனைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.