நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி

விவசாயி மகளுக்கு மருத்துவ படிப்புக்கு இடம்

Update: 2024-08-31 11:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாடக்காப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகள் புனித லட்சுமி. இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021 -22 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியுள்ளார். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அவருக்கு மருத்துவ படிப்பில் படிக்க இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கமளித்தும், தனியார் கோச்சிங் சென்டரில் சேர்த்தும் நீட் தேர்விற்கு தயார் படுத்தியுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக எழுதிய போதிலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவ படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன் பயின்றவர் இந்த வருட நீட் தேர்வில் 627 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியை படிப்பதற்கான தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 17 வது இடத்தினையும் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றார். இவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயில்வதற்காக இடம் கிடைத்துள்ளது. பெற்றோர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்த நிலையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஆகவும் கனவுடன் தான் நீட் தேர்வை எழுதுவதற்கு தொடர்ந்து பயிற்சி எடுத்து மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தான் அதிக மதிப்பெண்கள் பெற்றதாகவும், எனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Similar News