சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிவசக்தி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
சிவசக்தி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள குமணந்தொழுவில் சிவசக்தி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது .இந்த திருக்கோவிலில் அமாவாசை உள்ளிட்ட பல்வேறு தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம் .இதே போல் இன்று சனி பெயர்ச்சியினை முன்னிட்டு சிவசக்தி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன .இந்த சிறப்பு பூஜையில் மயிலாடும்பாறை கடமலைக்குண்டு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது