நெருங்கி வரும் விநாயகர் சதுர்த்தி சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்
ஆரணி ஆகஸ்ட்.31 வருகின்ற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வீடுகளிலும் பொது இடங்களிலும் சிலை வைத்து வழிபாடு நடைபெறும்.
ஆரணியில் வருகின்ற ஏழாம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இதற்காக பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. அவை போலீசார் அறிவுரைக்கேற்ப 15 அடி உயரத்திற்கு மிகாத விநாயகர் சிலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின் பேரில் சுற்றுச்சூழலுக்கு நீர் நிலைக்கும் கேடு விளைவிக்காத ரசாயன கலவை இல்லாமல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.ஆரணி பெரிய சாயகர் தெருவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அவை வித்தியாசமான தோற்றத்தில் வரலாற்று காட்சிகள் நினைவு கூறும் வகையிலும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்பவும் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு வருவது வியக்கத்தை வகையில் உள்ளது