தேவூரில் ஆர்ப்பரித்து கொட்டும் சரபங்கா நதி தடுப்பணை தண்ணீர் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்.!
சங்ககிரி:தேவூர் பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் சரபங்கா நதி தடுப்பணை தண்ணீர் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்.!
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் அருகேயுள்ள சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.... தடுப்பணை அருகே பூங்கா அமைக்கவும், ஆபத்தான முறையில் பொதுமக்கள் தடுப்பணையை கடந்து செல்வதால் தடுப்பணையின் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை ..... வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தேவூர் மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் இக்காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் இந்த தடுப்பணையின் மூலம் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த தடுப்பணையின் மீது 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளள் தினந்தோறும் சென்று வருகின்றனர். மேலும் தற்போது தொடர் மலையின் காரணமாக சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகின்றனர். இதனால் தடுப்பணையில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் குறுக்கே பொதுமக்களின் நலன் கருதி உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் எனவும், இந்த தடுப்பணையை சுற்றி பூங்கா அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.