வெள்ளகோவிலில் பைக் திருடிய வாலிபர் கைது

வெள்ளகோவில் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய நபர் கைது- 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Update: 2024-08-31 13:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் காவல்நிலைய  எல்லைக்குட்பட்ட செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன் (48), என்பவர் கடந்த 08.08.24 ம் தேதி  அவருக்கு சொந்தமான TN 33 T 2738 பதிவு எண் கொண்ட Yamaha RX 135. வண்டியை அவரது வீட்டின் முன்பு நிறுத்தி பூட்டிவிட்டு சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது தனது வண்டியை காணவில்லை என வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி, காங்கேயம் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆ.மாயவன்  மேற்பார்வையில் வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாசம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சந்திரன், முத்துக்குமார், மற்றும் காவலர்கள் பாலுச்சாமி, சந்தானம், கோபிநாத், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து வாகனத்தை திருடிச்சென்றது கரூர் மாவட்டம் குளித்தலை கீழவெள்யூரை சேர்ந்த சரத் @ சரத்குமார்-32 பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் வெள்ளகோவில், நாமக்கல், கரூர் போன்ற இடங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அவர் திருடிச் சென்ற 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Similar News