ஆர்.டி மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவிலில் சனி பிரதோஷம்

நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு

Update: 2024-08-31 13:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் திருக்கோவிலில் இன்று மாலை சனி பிரதோசம் வழிபாடு நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்தனர். பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புசாறு உட்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கபட்டது. இதில் பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டுதல் சம்மந்தமாக சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து எள், தயிர், எழும்பிச்சை, புளிசாதங்கள், சுண்டல் மற்றும் விபூதி போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சனி பிரதோசம் நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை வழி நடத்தினார்கள்.

Similar News