நாகர்கோவிலில் பாதுகாப்புப்படை ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம்

நிலுவைத் தொகை வழங்கல்

Update: 2024-08-31 15:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோா் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கான குறைதீா்க்கும் நாள் முகாம் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டிய கேரள மாநிலப் பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்காக நடைபெற்ற இம்முகாமை, சென்னை பாதுகாப்பு படை பிரிவு கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி டி.ஜெயசீலன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். இதில், 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனா். இந்த மனுக்களில் 316 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மீதியுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இம்முகாமில், ஓய்வூதியம் கிடைக்கப்பெறாத படைவீரா்கள் குடும்பத்தினா் 3 பேருக்கு ஓய்வூதிய நிலுவை தொகையாக ரூ. 21 லட்சத்து 61 ஆயிரத்து 228-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

Similar News