புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா
300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், வெங்கடேஸ்வரா கல்வி குழும தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி, அறக்கட்டளையின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசியதுடன், 300க்கும் மேற்பட்டோருக்கு இரண்டு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் வக்கீல் அருண் கலந்து கொண்டு பேசினார். இதில் இருப்பு குறிச்சி இருதய ஆண்டவர் ஆலயம் நிர்மல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு, கப்புச்சன் சபை சகாய செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் லூர்து ஜெயசீலன், மனநல மருத்துவ உளவியலாளர் ஆனந்தராஜ், தாமரைச்செல்வன், ரேய்மண்ட் பீட்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புனித ஜோசப் உடல் வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் குணஸ்தான மேரி நன்றி கூறினார்.