ஆண்டிபட்டி பகுதியில் இலவம் பஞ்சு மரங்களை அகற்றி வரும் விவசாயிகள்
ஒரு கிலோ இலவம்பஞ்சு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே லாபம் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்
தேனி மாவட்டத்தில் போடி கம்பம் ஆண்டிபட்டி பெரியகுளம் கடமலைகுண்டு பாலக்கோம்பை மயிலாடும்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் விவசாயிகள் அதிக அளவு சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு மரங்கள் சாகுபடி செய்து வருகின்றனர் . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் ஜீ உசிலம்பட்டி மயிலாடும்பாறை வருஷநாடு கடமலைக்குண்டு போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு இலவம் பஞ்சு சாகுபடி செய்து வருகின்றனர் .மேலும் ஜீ. உசிலம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயிகள் இலவம் பஞ்சு மரங்களை அகற்றி வருகின்றனர். மேலும் இலவம் பஞ்சு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றும் தற்போது ஒரு கிலோ 7 0 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் ,இதனால் நஷ்டம் ஏற்படுகிறது என்றும், மேலும் தற்பொழுது தண்ணீர் பற்றாக்குறையினால் இலவம் பஞ்சு காய்ப்பும் இல்லை என்றும் இதனால் இந்த மரங்களை அகற்றி மாற்று விவசாயத்தில் ஈடுபட போவதாகவும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனர்