ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் அதிமுக சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அதிமுகவின் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமாகிய வரதராஜன் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் அதிமுக சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணைத்தலைவருமாகிய டி ஆர் என் வரதராஜன் தலைமையில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுகவின் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் மதியரசன் பொருளாளர் லோகநாதன் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ராஜபாண்டி ,ரங்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்