ஆரணி, சேத்துப்பட்டு பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
ஆரணி, ஆக 31. ஆரணி மற்றும் சேத்துப்பட்டு பகுதி சிவாலயங்களில் சனிக்கிழமை சனிப்பிரதோஷம் முன்னி்ட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதோஷம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நபைெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் ஆரணி அடுத்த மெய்யூர் மெய்கண்டீஸ்ரர் ஆலயத்திலும் சனிப்பிரதோஷம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும் அருணகிரிநாதர் சிவாலயத்தில் ஆவணி மாத சனிபிரதோஷம் முன்னிட்டு அருணகிரிநாதர், நந்திதேவர்ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது அதனை தொடர்ந்து அலங்கார ரூபத்தில் அருணகிரிநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சேத்துப்பட்டு பழம்பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சிவாலயத்திலும், சேத்துப்பட்டு பாலாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரர் சிவாலயத்திலும்,அண்ணா தெருவில் உள்ள கற்பகாம்பிகை சமேத காரணீஸ்வரர் சிவாலயத்திலும், நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீர்க்காஜலஈஸ்வரர் சிவாலயத்திலும் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபராயணம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.