ஆண்டிபட்டி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம் போலீசார் விசாரணை
பாலூத்தைச் சேர்ந்த மலைச்சாமியின் மூத்த மகள் அபிநயா 19, தேனியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்ற மாணவி திரும்ப வரவில்லை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே பாலூத்து என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவரது மூத்த மகள் அபிநயா 19, தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஆகஸ்ட் 28 ல் கல்லூரிக்கு செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்ப வரவில்லை.அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை இதனால் தனது மகளை பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்காததால் மலைச்சாமி கொடுத்த புகாரில் கடமலைக்குண்டு போலீசார் தேடி வருகின்றனர்.