ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவிலில் தனது கணவரை காணவில்லை என மனைவி புகார்
ஏத்தக்கோயில் ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி, இவரது கணவர் பழனிச்சாமி ( 65 )என்பவர் காணவில்லை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி, இவரது கணவர் பெயர் பழனிச்சாமி ( 65 )பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் இவரை காணவில்லை.அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முத்துலட்சுமி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்